சனி, 11 ஜூன், 2016

விக்ரம் மருத்துவமனையின் ஹெர்னியா(குடலிறக்கம்) சிகிச்சை

ஹெர்னியா என்றால் என்ன?
வயிற்றின் தசைகளில் எங்கேனும் தொய்வு ஏற்பட்டால் அதன் வழியே குடல் வெளியே வந்து பார்பதற்கு வீக்கம் அல்லது கட்டி போல் காணப்படும் அதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் எனப்படும்.அது தானாக சரி ஆகாது அதனை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்,மேலும் அதனை சரி செய்யாவிட்டால் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
ஹெர்னியா ஏற்படுவதற்கான காரணங்கள் 

*புகை பிடித்தல் 

*தவறான உணவு பழக்க வழக்கங்கள் 

*திசுச் சிதைவு 

 காயம் காரணமாக ஏற்படும் புண்களின் வழியே உள் உறுப்புகள் புடைக்கப்பட்டு  ஹெர்னியா(குடலிறக்கம்) ஏற்படுகிறது.

*முதிர்ந்த வயது 

  இளவயதினருடன்  ஒப்பிடுகையில் வயது முதிர்தவர்களுக்கு எளிதில் தசை பலவீனம் அடைவதால் உள்ளுறுப்புகள் எளிதில் புடைத்து ஹெர்னியா(குடலிறக்கம்) ஏற்படுகிறது.
*அறுவை சிகிச்சை

பொதுவாக பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சை காரணமாக அடி வயற்றில் குடல் வீங்கி ஹெர்னியா(குடலிறக்கம்) ஏற்படுகிறது.

*பிறப்புக் குறைபாடுகள்

 தொப்புள் பகுதி அருகில் ஏற்படும் வீக்கம் அல்லது புடைப்பு ஒரு வகை ஹெர்னியா எனப்படும், இது வழக்கமாக பிறந்த பின்னர் உருவாகிறது. வயிற்றுச் சுவரில் ஏற்படும் ஒரு பிறவிக் குறைபாடு இந்த வகை ஹெர்னியா உருவாகுவதற்கு காரணமாகும்.
*மலச்சிக்கல்

 உங்களுக்கு நீண்ட நாளாக மலச்சிக்கல் இருந்து வந்தால், மிகவும் கஷ்டப்பட்டு மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த கடும் அழுத்தம் காரணமாக மென்மையான வயிற்றுத் திசுக்கள் கிழிவதற்கு வாய்ப்பு உண்டு, இது ஹெர்னியாவிற்கு வழிவகுக்கும்.

*மரபியல் காரணிகள்

தசைப் பலவீனம் மரபு வழி ஏற்படக்கூடியது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இந்த வகை தசைப் பலவீனத்தால் ஒருவரின் நெருங்கிய உறவினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு ஹெர்னியா ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
*உடல் பருமன்

 வயிற்றுத் தசைகள் மேல் அளவுக்கு அதிகமான கொழுப்பு படிவதால், இது மெதுவாக அந்தத் தசைகளை பலவீனப்படுத்தும். இவ்வாறு தசைகள் பலவீனமாகுதல் ஹெர்னியா ஏற்படுவதற்கான முக்கிய காரணமாகும்.

*மலச்சிக்கல் அல்லது மலம் கழிக்கும் போது இரத்தம் வருதல் 

*உடலை வளைக்கும் போது வயிறு அல்லது இடுப்பு பகுதியில் ஒரு வித வலி உணர்வு ஏற்படுதல் 

*நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று வலி ஏற்படுதல் 

*தொடர் இருமல் 
*சிறுநீர் கழிக்க கஷ்டப்படுதல் 
*திடிர் அதிக எடை கூடுதல் 
*வயற்றில் வீங்கிய இடத்தில் வலி 
*குமட்டல்,வாந்தி 

மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படும் போது உடனே மருத்துவரை அனுகுதல் மிகவும் அவசியம்.
விக்ரம் மருத்துவமனையில் செய்யப்படும் ஹெர்னியா (குடலிறக்கம்)  சிகிச்சை  (Hernia Treatment)

எங்கள் விக்ரம் மருத்துவமனையில் ஹெர்னியவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஹெர்னியா (குடலிறக்கம்)  சிகிச்சை   என்னும் முறையில் புதிய தொழில் நுட்பத்தின் உதவியுடன் அவர்களுக்கு வலிக்காமலும் மிகவும் எளிமையாகவும் குறைந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.மேலும் இவ்வாறு செய்யப்படும் அறுவை சிகிச்சையில் பாதிக்கப்பட்ட இடத்தை கத்தியால் கிழிக்கபடுவதும் இல்லை பிறகு அங்கு தையல் போடப்படுவதும் இல்லை.
விக்ரம் மருத்துவமனையின் ஹெர்னியா (குடலிறக்கம்)  சிகிச்சை செய்யும் முறை 
எங்கள் மருத்துவமனையின் ஹெர்னியா சிகிச்சை  செய்யும் முறையில் முதலில் உடலில் பாதிக்கப்பட்ட  இடத்தில் ஊசியின் மூலம் மரத்து போக செய்து பின்பு பாதிக்கப்பட்ட  இடத்தின்  மேலும் கீழும் இரு துளைகள் அமைத்து அதனை கேமரா வழியாக திரையில் பார்த்து அங்கு  ஒரு விதமான அழுத்தம் தரப்படுகிறது அதன் மூலம் பதிக்கப்பட்ட குடலை சரி செய்து அதன் மேல் வலை ஒன்று அமைக்கப்பட்டு மீண்டும் அவிடம் பாதிக்க படாமலும் வேறு இடத்திற்கு பரவாமலும் பாதுகாக்க செய்யப்படுக்கிறது.இம்முறையில் துளைகள்  மட்டுமே போடப்படுவதால் இங்கு எவ்வித தையலும் போடப்படுவதில்லை.
விக்ரம் மருத்துவமனையில் ஹெர்னியா சிகிச்சை செய்து கொள்வதால் ஏற்படும் பலன்கள் 
*வலி இல்லாத எளிதாக மற்றும் மிகவும் குறைந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

*நீண்ட காலம் மருத்துவமனையில் தங்க தேவை இல்லை,மிக விரைவில் தங்களின் இயல்பு நிலைக்கு வரலாம்.
*பழைய சிகிச்சை முறை பயன்படுத்தப்படுவது இல்லை.அதனால் மிகு விரைவில் இந்நோயிலிருந்து விடுபடலாம்.
*ஆண் பெண் குழந்தைகள் முதியவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது.
*மேலும் எங்கள் மருத்துவமனையில் இச்சிகிச்சை பெற்ற நோயாளிகள் அறுவை சிகிச்சை முடிந்து வெளியே வந்தவுடன் அவர்களால் நடக்க முடியும்.
*மேலும் 10 நாட்க்களுக்குள் அவர்களால் விளையாட முடியும்,பளு தூக்க (Weight lifting) முடியும். 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக